Wednesday, April 2, 2014

வேர்க்கடலை, பொட்டுக்கடலை போன்றவற்றை உருண்டை பிடிக்க வெல்ல பாகு காய்ச்சும்போது, வெல்லத்துடன் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் சர்க்கரையையும் சேர்த்துக் காய்ச்சினால், உருண்டைகள் கரகரப்புடனும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமலும் இருக்கும்.
- கே.சுபாக்கனி, மேலகிருஷ்ணன் புதூர்
றிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது சீக்கிரமே அழுகிவிடுகிறதா? அவற்றை ஈரமில்லாமல், ஒரு செய்தித்தாளில் சுற்றி, கறுப்பு நிற பிளாஸ்டிக் பையில் வைத்து சுருட்டி, ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். பத்து நாட்களானாலும், அழுகாமல் அப்படியே பசுமையாக இருக்கும்.
- ஆர்.ராமாத்தாள், சென்னை-42
ப்பாத்தி மிருதுவாக இருக்க கொஞ்சம் எண்ணெய் சேர்த்து மாவு பிசைவோம். அதற்குப் பதில், முதலில் எண்ணெய் சேர்க்காமல் மாவு பிசையவும். பிறகு, ஒவ்வொரு சப்பாத்தியையும் ஒரு சிறு அப்பளம் போல் உருட்டி, அதன் மேல் எண்ணெயைத் தடவி, நான்காக மடித்து மீண்டும் சப்பாத்தியாகத் திரட்டி சுட்டால் மென்மையாக இருக்கும். குழந்தைகளுக்கு எண்ணெய்க்குப் பதில் நெய் தடவலாம். எண்ணெய் வேண்டாதவர்க்கு எதுவும் தடவாமல் அப்படியே சப்பாத்தி செய்து கொடுக்கலாம்.
- பா.மலர், திருப்பூர்
மைக்கும்போது கிழங்குகள் தவிர்த்து மற்ற காய்கறிகளைக் கூடுதலாக தண்ணீர் விட்டு வேகவையுங்கள். பிறகு, அந்தத் தண்ணீரை வடிகட்டி எடுத்து சிறிது சோள மாவைக் கரைத்து விட்டு, ஒரு கொதி வரும் வரை அடுப்பில் சுட வையுங்கள். இதில் மிளகுப்பொடி, உப்பு சேர்த்து பெரியவர்களுக்கும், தேன் கலந்து குழந்தைகளுக்கும் சூப்பாக கொடுக்கலாம். விரும்பினால் புதினா, கொத்தமல்லித் தழையையும் சேர்க்கலாம்.
- எஸ்.சாய் சாத்விகா, சீர்காழி
காலையில் செய்த இட்லிகள் மீதமிருக்கிறதா? இட்லிகளின் இருபுறமும் வெண்ணெய் அல்லது நெய் தடவி, சூடான தோசைக்கல்லில் போட்டு குறைந்த தீயில், பிரவுன் நிறம் வரும் வரை சுட்டு எடுத்தால்... மொறுமொறுவென்று ஆகிவிடும். இதைத் தக்காளி சாஸுடன் குழந்தைகளுக்குக் கொடுத்தால்... சட்டென்று காலியாகிவிடும். இட்லிகள் தடிமனாக இருந்தால், நடுவில் வெட்டி இரண்டு மெல்லிய வட்டங்களாக சுடலாம்.
- ஜே.கமலம், நெல்லை
9:50 AM Unknown

பருப்புப்பொடி
தேவையானவை: துவரம்பருப்பு - 2 கப், கடலைப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.
குறிப்பு: எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட... சுவை அசத்தலாக இருக்கும்.
பூண்டுப்பொடி
தேவையானவை: பூண்டு - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 10, உளுத்தம்பருப்பு - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன்... மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு: பூண்டு, வாயுத் தொல் லையை நீக்கும். இதய நோயாளி களுக்கு மிகவும் பயன்தரக் கூடியது.
தேங்காய்ப்பொடி
தேவையானவை: முற்றிய தேங்காய் - ஒன்று, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சிவக்க வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து... தேங்காய், உப்பு சேர்த்துப் பொடித்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: இந்த தேங்காய்ப்பொடியை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். காய் கறிகளை சமைக்கும்போது மேலே தூவிக் கிளறலாம். இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். கொப்பரைத் தேங்காயில் தயாரித்தால், ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.
இட்லி மிளகாய்ப்பொடி
தேவையானவை: காய்ந்த மிளகாய் - 100 கிராம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், எள் - 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். எள்ளையும் வறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும். முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து, எள் சேர்த்து பொடித்து எடுக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, கைபடாமல் ஸ்பூன் உபயோகப்படுத்தி பயன்படுத்தினால்... இது இரண்டு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
மிளகு  சீரகப்பொடி
தேவையானவை: மிளகு, சீரகம் - தலா 100 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு - சீரகத்தை வறுத்துப் பொடித்து, இதனுடன் பெருங்காயத்தூளை சேர்க்கவும். இதை சாதத்துடன் கலக்கும்போது உப்பு சேர்க்கவும்.
குறிப்பு: 'சம்பா சாதம்’ என்று கோயில்களில் இந்தப் பொடியை சாதத்துடன் சேர்த்து, நெய் கலந்து கொடுப்பார்கள். இது கைவசம் இருந்தால், ரசம் தயாரிக்கும்போது பயன்படுத்தலாம்.
கூட்டுப்பொடி
தேவையானவை: கடலைப் பருப்பு, தனியா - தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6.
செய்முறை: வெறும் வாணலி யில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். மூன்றையும் ஒன்றுசேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு: கூட்டு, பொரியல் செய்யும் போது இதை மேலே தூவிக் கிளறி இறக்கினால்... சுவை அதிகரிக்கும்.
ரசப்பொடி
தேவையானவை: தனியா - 4 கப், துவரம்பருப்பு, சீரகம், மிளகு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 10.
செய்முறை: வெறும் வாணலியில் தனியா, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, ஒன்றுசேர்த்து பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: புளியைக் கரைத்து இந்த ரசப்பொடி, உப்பு சேர்த்து, ஒரு தக்காளியை நறுக்கிப் போட்டு, கொதிக்கவிட்டு 10 நிமிடத்தில் ரசம் தயாரித்துவிடலாம். சிறிதளவு நெய்யில் கடுகு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்தால்... மணம், ருசி ஆளை அசத்தும்.
எள்ளுப்பொடி
தேவையானவை: எள், உளுத்தம்பருப்பு - தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ள வும்.
குறிப்பு: புரட்டாசி சனிக் கிழமையில் இந்தப் பொடியை செய்து, சாதத்துடன் கலந்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்வார்கள்.
கறிவேப்பிலை பொடி
தேவையானவை: கறிவேப்பிலை (ஆய்ந்தது) - 4 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் கறிவேப்பிலையை எண்ணெய் விடாமல் மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
குறிப்பு: இதை சூடான சாதத்தில் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது. தலைமுடி வளர்ச்சிக்கும் மிகவும் உதவும்.
ஆவக்காய் ஊறுகாய் பொடி
தேவையானவை: காய்ந்த மிளகாய், கடுகு - தலா 200 கிராம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்ந்த மிளகாயை மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடுகையும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும் இவற்றுடன் உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
குறிப்பு: ஆவக்காய் மாங்காய் சீஸனில் இந்தப் பொடி மிகவும் உபயோகமாக இருக்கும். இந்தப் பொடியை உபயோகப்படுத்தி ஊறுகாய் போட்டால், ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.
அங்காயப் பொடி
தேவையானவை: சுண்டைக்க £ய் வற்றல், வேப்பம்பூ, கறிவேப் பிலை - தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு - ஒரு பெரிய துண்டு, காய்ந்த மிளகாய் - 6, கடுகு, மிளகு, சீரகம் - தலா 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் ஒவ்வொரு பொருளையும் தனித் தனியாக வறுத்து, தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: இந்தப் பொடியை ஆறு மாதம் வரை வைத்து உபயோகிக்கலாம். சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட ருசியாக இருக்கும். உடல்வலி, வயிற்று உபாதைகளுக்கு சிறந்த நிவாரணி இது.
நாரத்தை இலை பொடி
தேவையானவை: நாரத்தை இலை - 2 கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நாரத்தை இலைகளின் நடுவில் உள்ள காம்பினை ஆய்ந்து எடுக்கவும். இலைகளுடன் உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: இது, தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.
திடீர் புளியோதரைப்பொடி
தேவையானவை: புளி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 10, வேர்க்கடலை - ஒரு கப், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், வெந்தயம் - 2 டீஸ்பூன், தனியா - 4 டீஸ்பூன், மஞ்சள் - ஒன்று (உடைத்துக் கொள்ளவும்), கட்டிப் பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியை  வாணலியில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மொறுமொறுப்பாக வறுக்கவும். காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, வெந்தயம், தனியா, மஞ்சள், பெருங்காயம், வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து இந்த புளியோதரைப் பொடி சேர்த்து சாதத்தில் போட்டு கலந்தால்... உடனடி புளிசாதம் ரெடி! இந்தப் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து... வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பொடி கரைசலை கொதிக்கவைத்தால், புளிக்காய்ச்சல் தயாராகிவிடும்.
வெந்தயப்பொடி
தேவையானவை: வெந்தயம் - 100 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடித்து, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
குறிப்பு: காலையில் மோருடன் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் கலந்து, வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றுப் புண் வராமல் தடுக்கும்... உடல் குளிர்ச்சியாகும். வெறும் வெந்தயத்தை தயிரில் முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் மிக்ஸியில் அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால், தலைமுடி நன்கு வளரும். சூடு குறையும்.
வேப்பம்பூபொடி
தேவையானவை: வேப்பம்பூ - ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் வேம்பம்பூ, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: வேப்பம்பூ, பித்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வேப்பம்பூ அதிகமாக கிடைக்கும் சீஸனில் சேமித்து வைத்து... பிறகு துவையல், பொடி, ரசம், பச்சடி என்று பலவிதமாக செய்து பயன் பெறலாம்.
சாம்பார்பொடி
தேவையானவை: காய்ந்த மிளகாய் - 250 கிராம், தனியா - 500 கிராம், துவரம்பருப்பு - 200 கிராம், கடலைப் பருப்பு - 100 கிராம், வெந்தயம், மிளகு - தலா 50 கிராம், மஞ்சள் - 2.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை லேசாக வறுத்து (தனித்தனியாக வறுக்கவும்), மெஷினில் கொடுத்து அரைக்கவும் .
குறிப்பு: வெயிலில் காயவைத்து அரைப்பதைவிட வறுத்து அரைத்தால், சாம்பார் பொடி வாசனையாக இருப் பதுடன், நீண்ட நாள் கெடாது.
நெல்லிக்காய் பொடி
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 10, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நெல்லிக்காயை கேரட் துருவியில் துருவி வெயிலில் காயவைத்து, வெறும் வாணலியில் வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடிக்கவும்.
நெல்லிக்காய்... வைட்டமின் 'சி’, இரும்புச்சத்து மிக்கது.
கொத்தமல்லிப் பொடி
தேவையானவை: பச்சை கொத்தமல்லி - ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, புளி - பெரிய நெல்லிக் காய் அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை  வறுத்துக் கொள்ளவும். புளியை தனியாக வறுக்கவும் (நன்கு உலர்ந்துவிடும் வரை). கொத்தமல்லியை ஆய்ந்து, கழுவி, ஒரு துணியில் பரவலாகப் போட்டு உலரவிடவும். வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, உப்பு சேர்த்து, கொத்தமல்லியை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொடிக்கவும்.
குறிப்பு: இது தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன். கொத்தமல்லி இல்லாத நாட்களில், அதற்குப் பதிலாக இந்தப் பொடியை குழம்பில் சிறிதளவு சேர்க்கலாம்.
மூலிகைப்பொடி
தேவையானவை: வல்லாரை இலை, முடக்கத்தான் இலை, துளசி இலை,  தூதுவளை இலை, புதினா - தலா ஒரு கைப்பிடி அளவு, சுக்கு - ஒரு துண்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இலைகளைத் தனித்தனியாக கழுவி, துணியில் பரவலாக போட்டு, நன்கு உலர்ந்ததும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவும். வறுத்தவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, சுக்கை நசுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
குறிப்பு: வல்லாரை ஞாபக சக்தி தரும். முடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து. துளசி - தூதுவளை தொண்டைக்கட்டு, சளி, இருமல் வராமல் தடுக்கும் சக்தி உடை யவை. புதினா வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது. சுக்கு வாயுத்தொல்லையை நீக்கும். இத்தனை பயனும் உள்ள இந்த மூலிகைப்பொடி உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த துணைவன்.
சுண்டைக்காய்பொடி
தேவையானவை: சுண்டைக்காய் வற்றல் - 100 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் சுண்டைக்காய் வற்றல், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். பிறகு இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: சுண்டைக்காய் வற்றல் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சூடான சாதத்தில் இந்தப் பொடியை சிறிதளவு சேர்த்து, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.
ஓமப்பொடி
தேவையானவை: ஓமம் - 100 கிராம், மிளகு - 10, சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் ஓமம், மிளகு, சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். பிறகு அவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
குறிப்பு: இந்தப் பொடியை சூடான சாதத்தில் போட்டு, நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். மோருடன் இதை சிறிதளவு சேர்த்து அருந்தினால், ஜீரண சக்தி அதிகரிக்கும். இந்தப் பொடி கைவசம் இருந்தால் தோசை மாவுடன் கலந்து தோசை செய்தால் மிகவும் ருசியுடன் இருக்கும். சிறிதளவு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு தயாரித்தால் சுவையில் அசத்தும்.
கொள்ளுப்பொடி
தேவையானவை: கொள்ளு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, உளுத்தம்பருப்பு - 100 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் கொள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: கொள்ளு, கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.
சட்னி பவுடர்
தேவையானவை: கொப்பரைத் தேங்காய் துருவல் - 2 கப், காய்ந்த மிளகாய் - 4, பொட்டுக்கடலை - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் பொட்டுக்கடலை, கொப்பரைத் துருவல், காய்ந்த மிளகாயை வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
குறிப்பு: இந்தப் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்தால்... உடனடி சட்னி தயார். சிறிதளவு தயிர் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.
கீரைப்பொடி
தேவையானவை: கோங்கூரா (புளிச்சக்கீரை), கறிவேப்பிலை, புதினா - ஒரு கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோங்கூரா (புளிச்சக்கீரை) இலை, கறிவேப் பிலை, புதினா ஆகியவற்றை சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி, ஒரு துணியில் போட்டு, வெயிலில் உலர்த்தவும். பிறகு, இவற்றை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.
குறிப்பு: உளுந்தை ஊறவைத்து அரைத்து, இந்தப் பொடியை சேர்த்து, எளிதாக கீரை வடை தயாரித்துவிடலாம். புளிச்சக்கீரை, இரும்புச்சத்து கொண்டது.
பாயச பவுடர்
தேவையானவை: பிஸ்தா பருப்பு - 10, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு - தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை, பால் - தேவையான அளவு.
செய்முறை: பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பை லேசாக சூடாக்கி மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.
பாலைக் காய்ச்சி இந்த பவுடரை கொஞ்சம் சேர்த்து, ஏலக்காய்த் தூள், சர்க்கரை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால்... திடீர் பாயசம் ரெடி. வாழைப்பழம், பலாக்சுளையை பொடியாக நறுக்கி சேர்த்தால், சுவை கூடும்.
தீபாவளி மருந்துப்பொடி
தேவையானவை: கண்டதிப்பிலி - 50 கிராம், சுக்கு - ஒரு துண்டு, ஓமம் - 50 கிராம், சீரகம் - 2 டீஸ்பூன், அரிசி திப்பிலி - 25 கிராம், வாயு விளங்கம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) - 25 கிராம், வால் மிளகு - 50 கிராம், மிளகு - 25 கிராம், சித்தரத்தை - ஒரு துண்டு.
செய்முறை: கண்டதிப்பிலி, சுக்கு, ஓமம், சீரகம், அரிசி திப்பிலி, வாயு விளங்கம், மிளகு, வால் மிளகு, சித்தரத்தை எல்லாவற்றையும் நன்கு நசுக்கி, வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும்.
குறிப்பு: பட்சணங்கள் அதிகமாக சாப்பிடும் நேரங்களில், குறிப்பாக தீபாவளி சமயத்தில், வயிற்றுக் கோளாறு ஏற்படாமல் தடுக்கும் குணம் கொண்டது இந்தப் பொடி.
ஒரு பங்கு பொடிக்கு ஒரு பங்கு பொடித்த வெல்லம் சேர்த்து, லேசாக சூடாக்கிய நெய் - நல்லெண்ணெய் 4 டீஸ்பூன், சிறிதளவு தேன் சேர்த்துப் பிசைந்து... இந்தக் கலவையில் கொஞ்சம் எடுத்து, சிறிய நெல்லிக்காய் சைஸில் உருட்டி சாப்பிடலாம்.
அடைப்பொடி
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6.
செய்முறை: இட்லி அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை ஒன்றுசேர்த்து ரவை பதத்துக்கு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவுடன் தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து... வெங்காயம் நறுக்கிப் போட்டு அடை தயாரிக்கலாம்.
தனியாப்பொடி
தேவையானவை: தனியா - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வறுக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
குறிப்பு: தனியாப்பொடி பித்தத்தை தணிக்கும். இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
பஜ்ஜி பவுடர்
தேவையானவை: கடலைப்பருப்பு - 100 கிராம், அரிசி - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 6, சோள மாவு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாயை மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). இதனுடன் சோள மாவு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து... விருப்பமான காய்களைத் தோய்த்து பஜ்ஜி தயாரிக்கலாம்.
வடை பவுடர்
தேவையானவை: தோல் நீக்கிய உளுத்தம்பருப்பு - 250 கிராம், மிளகு - 20, காய்ந்த மிளகாய் - மூன்று, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). பிறகு இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
குறிப்பு: தேவைப்படும்போது, மாவுடன் தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசையவும். கோஸ் துருவல், நறுக்கிய கீரை, வெங்காயம் என விருப்பமானதை சேர்த்து, பிசைந்து வடைகளாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.
தொகுப்பு: பத்மினி  படங்கள்: எம்.உசேன்  ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி
ஆச்சி கிச்சன் ராணி
சிக்கன்  பைனாப்பிள் கிரேவி
தேவையானவை: எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ, பைனாப்பிள் - கால் கிலோ, ஆச்சி மல்லி தூள் - 3 டீஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு - 5, ஏலக்காய் - 2, ஜாதிக்காய் - ஒரு சிறிய துண்டு, சோம்பு - அரை டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, கசகசா - அரை டீஸ்பூன், முந்திரி - 5, பச்சை மிளகாய் - 5 (அல்லது தேவைக்கேற்ப), தேங்காய் - கால் மூடி, யோகர்ட் - அரை கப், நெய் - 2 டீஸ்பூன், தயிர், உப்பு - தேவையான அளவு
செய்முறை: எலும்பில்லாத சிக்கனை இரண்டு இஞ்ச் அளவுக்கு, சின்ன துண்டுகளாக போட்டு, அதில் தயிர் விட்டுப் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய், சோம்பு ஆகியவற்றை  லேசாக வறுத்து மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை லேசாக எண்ணெய் விட்டு வதக்கி, தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். முந்திரி - கசகசாவை விழுதாக அரைக்கவும். பைனாப்பிளை மிக்ஸியில் அரைத்து வடிவட்டி சாறு தயாரிக்கவும். ஊறிய சிக்கனை நன்றாகக் கழுவி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துப் பிசைந்து, மீண்டும் சுமார் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
ஒரு கடாயில் நெய் விட்டு, மசாலா பொருட்கள் பொடி, வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா வாசனை போன பின்பு, சிக்கன் துண்டு களை சேர்த்து மூடி போட்டு...  அவ்வப்போது மூடியை திறந்து வதக்கவும். அரை வேக்காடு வரும்போது... யோகர்ட், ஆச்சி மல்லி தூள், பச்சை மிளகாய் - தேங்காய் விழுது, உப்பு போட்டு மூடி, வேகவிடவும். சிக்கன் நன்கு வெந்த தும் முந்திரி - கசகசா விழுது சேர்த்து அடி பிடிக் காமல் நன்கு கிளறிக்கொண்டிருக்க வேண்டும். நல்ல மணம் வரும்போது பைனாப்பிள் சாறு கலந்து கிளறி, இரண்டு நிமிடம் வைத்திருந்து இறக்கவும். சுமார் அரை மணி நேரம் கழித்து பரிமாறவும்.
சப்பாத்தி, நாண், பரோட்டா போன்றவற்றுக்கு ஏற்ற மிக மிக சுவையான சைட் டிஷ் இது.
- 'மாங்குடி’ மும்தாஜ், நாகப்பட்டினம்
9:49 AM Unknown

Sunday, March 30, 2014

8:58 PM Unknown

6:53 PM Unknown

'மைக்ரோவேவ் அடுப்பு’ (நுண்ணலை அடுப்பு) மூலம் சமைத்தால் உணவில் இருக்கும் சத்துக்கள் போய்விடுமா?’  - இந்தச் சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இன்னொருபுறம் மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் இருக்கிறது. இதில் எது உண்மை? எது புனைவு? சுகாதார மேம்பாட்டு அலுவலர் பூர்ணிமா, உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் கோ.ராஜா ஆகியோரிடம் பேசினோம். 
மைக்ரோவேவ் அடுப்பு எப்படிச் செயல்படுகிறது?
'மைக்ரோவேவ் அடுப்பில் உணவைச் சமைக்கும் போது, முதலில் அடுப்பினுள் மின்சார அலை உண்டாகும். அந்த அதிர்வினால் நீர், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றின் மூலக்கூறுகள் அதிர்வடைந்து ஒன்றுடன் ஒன்று உராய்ந்து வெப்பம் உண்டாகும். கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்களை இந்த அலை பாதிக்காது. மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்க அதற்குரிய பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்று பூர்ணிமா கூறினார்.
'மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் சத்து இழப்பு ஏற்படுமா?’
இந்தக் கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் கோ.ராஜா, ''மைக்ரோவேவ் அடுப்புக்குள் இருக்கும் மேக்னெட்ரான் என்னும் கருவி அடுப்புக்குள் வைத்த உணவுப் பொருளைச் சூடேற்ற உதவுகின்றது. இதில் சமைக்கும் நேரமும் குறைவு, காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மறைந்து போகாது'' என்றார்.
இந்த சந்தேகம் குறித்து உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தியிடம்  பேசியபோது, ''காய்கறிகளையும் ஒயிட் மீட் என்று சொல்லப்படும் மீன், கோழி ஆகியவற்றையும் மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பதால் சத்துக்களில் பெரிய இழப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ரெட் மீட் எனப்படும் ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் நிறைய எண்ணெய் விட்டு மசாலாக்கள் சேர்த்துச் சமைத்தால் சாப்பிட ருசியாக இருக்குமே தவிர ஆரோக்கியமானதாக இருக்காது.'' என்றார். மற்ற சமையலுக்கும் மைக்ரோவேவ் சமையலுக்குமான வித்தியாசத்தையும் அவர் விளக்கினார்.  
''மைக்ரோவேவ் அடுப்பில் பாலைச் சுடவைத்தால் அதிலுள்ள லைசோஸைம் சிதையும். சாதாரண அடுப்புச் சமையலின்போது பாத்திரத்தில் காய்கறிகளை அதிக நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் அது கருகியும் தீய்ந்தும் போய்விடும். அவற்றையே குக்கரில் வேக வைக்கும்போது காய்கறிகளின் ருசி குறைந்துவிடும் சாத்தியம் அதிகம். ஆனால் மைக்ரோவேவ் அடுப்பில் சரியான சூட்டில் முறையாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளின் சத்துக்கள் அப்படியே இருக்கும். காய்கறிகளின் நிறமும் மாறாது'' என்றார்.
 
மைக்ரோவேவ் அடுப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
 சாதாரணமாக மைக்ரோவேவ் அடுப்பில் காய்கறிகளைச் சமைத்து முடித்ததும் ஸ்விட்சை அணைத்துவிட, அதன் இயக்கம் முழுவதும் நின்றுவிடும். ஸ்விட்ச் அணைக்கப்பட்ட நொடியில் மின் அலைகள்  மறைந்து போவதால் அடுப்புக்குள் கதிர்வீச்சு எதுவும் இருக்காது. சமைத்த உணவிலும் எவ்விதக் கதிர்வீச்சின் தாக்கமும் இருக்காது. ஆனால், இதுவே அடுப்பில் கசிவு இருந்து அது தெரியாமல் சமைத்தால் நிச்சயம் பிரச்னை ஏற்படும். எனவே தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் அடுப்புகளையே பயன்படுத்தவேண்டும்.
 மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்கும் போது அதன் கதவை நன்றாக மூடி லாக்கான பிறகே சமைக்க வேண்டும். சரியாக மூடாவிட்டால் கசிவு ஏற்பட்டுத் தீக்காயம் ஏற்படும். அடுப்பில் எதாவது பிரச்னை என்றால், உடனடியாகப் சர்வீஸுக்கு கொடுக்க வேண்டும்.
 மைக்ரோவேவ் அடுப்பை வாங்கும்போது தரப்பட்ட கையேட்டை நன்றாகப் படித்த பின்னரே அதில் சமைக்க ஆரம்பிக்க வேண்டும். மைக்ரோவேவ் அடுப்பில் கோளாறு ஏற்பட்டால் அதை நாமே பழுது பார்க்க முயற்சி செய்யக் கூடாது.
 'மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் புற்றுநோய் ஏற்படும்’ என்று ஒரு பிரிவினருக்கு அச்சம் இருந்தாலும் இது குறித்து எந்த ஆராய்ச்சி முடிவும் இதுவரை வெளிவரவில்லை.
 
மைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை:
 மைக்ரோவேவ் அடுப்பில் உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது.
 குறுகிய வாயுள்ள பாத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது
 முட்டையை ஓட்டுடன் வைக்கக்கூடாது.
 வறுவல் செய்யும்போது உப்பு போடக்கூடாது, ஏனெனில் அப்படிச் சமைத்தால் உப்பு தீய்ந்து அதிலிருக்கும் ஐயோடின் சிதைந்து போய்விடும். எனவே, வறுத்த பின்பு உப்பு சேர்க்க வேண்டும்.
 பிளாஸ்டிக் மற்றும் காகிதப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் அவை உருகி, எரிந்து போய்விடும்
 தண்ணீரைச் சுட வைக்க மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இதன் நுண் கதிர்களால் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டுத்தான் தண்ணீர் சூடாகும். அதனால் நீராவி வெளியேறாது. தண்ணீர் அதன் கொதி நிலையான 100 டிகிரி செல்ஸியஸ் அளவையும் தாண்டி சூடாகும். ஆனால், தண்ணீர் கொதிப்பில் சலனம் எதுவும் இருக்காது. இது தெரியாமல் அடுப்பை அணைத்ததும் உள்ளிருந்து நீரை அஜாக்கிரதையாக எடுத்தால் தப்பித் தவறி தண்ணீர் உடம்பில் பட்டுத் தீக்காயம் ஏற்படும்.  

6:46 PM Unknown

Monday, March 24, 2014

சேமியா வெஜிடேபிள் கிச்சடி

தேவையான பொருட்கள்:

சேமியா - 1 கப் பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது) கேரட் - 1 (நறுக்கியது) பீன்ஸ் - 4 (நறுக்கியது) கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் பட்டை - 1 கிராம்பு - 5 பிரியாணி இலை - 2 கறிவேப்பிலை - 1 கொத்து கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு ADVERTISEMENT

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து நீரை கொதிக்க விடவும். அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து, கொதிக்கும் நீரில் அந்த சேமியாவைப் போட்டு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, இறக்கி மூடி தனியாக வைத்து கொள்ளவும். (முக்கியமாக சேமியா குலைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.) பின் நீரை வடித்து, ஒரு தட்டில் அந்த சேமியாவை பரப்பி, குளிர வைக்கவும். பின் மற்றொரு வாணலியில் நீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை போட்டு, வேக வைத்துக் கொள்ளவும். பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளிக்கவும். பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதோடு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, மசாலா அனைத்தும் ஒன்று சேரும் வரை நன்கு கிளறவும். மசாலா அனைத்து காய்கறிகளுடன் ஒன்று சேர்ந்ததும், அதில் சேமியாவைப் போட்டு கிளறி, தீயை குறைவில் வைத்து, தட்டால் வாணலியை மூடி 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும். இப்போது சுவையான சேமியா வெஜிடேபிள் கிச்சடி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, தயிருடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

9:16 PM Unknown

Tuesday, March 18, 2014

நீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்

தேவையான பொருட்கள்: 
 
பாகற்காய் - 2 
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன் 
தேன் - 1 டீஸ்பூன் 
மிளகு தூள் - 1 சிட்டிகை 
உப்பு - தேவையான அளவு 
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் பாகற்காயின் தோலை சீவி, பின் அதனை கழுவி, துண்டுகளாக்கி, விதைகளை நீக்கி விட வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து, ஐஸ் கட்டிகளைப் போட்டு குடிக்க வேண்டும். இப்போது நீரிழிவு நோயாளிகள் குடிப்பதற்கு ஏற்ற பாகற்காய் ஜூஸ் ரெடி!!!

7:45 AM Unknown