Tuesday, January 28, 2014

* பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

* பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

* பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

* கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

* பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

* தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாகும்.

* புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

* பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

* புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.
2:32 AM Unknown

Thursday, January 23, 2014

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே, சற்று திட உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்கும் போது தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

ஏனெனில் திடமான உணவுகள் பல உள்ளன. அவை அனைத்தையுமே குழந்தைகளால் சாப்பிட முடியாது. ஆகவே குழந்தைகளுக்கு முதல் முதலில் உணவுகளைக் கொடுக்க நினைக்கும் போது, எந்த உணவுகளையெல்லாம் முதலில் கொடுக்கலாம் என்பதைப் பற்றி தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி,சிலருக்கு குழந்தைக்கு எப்போது திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம் என்பதில் சந்தேகம் இருக்கும். அப்படி குழந்தைகளுக்கு எப்போது திட உணவுகளை கொடுப்பதென்று சந்தேகம் இருந்தால், கீழே கொடுத்துள்ள அறிகுறிகளைக் கொண்டு அறிந்து கொள்ளுங்கள். 

உங்கள் குழந்தை நன்கு உட்காரவோ அல்லது தவள ஆரம்பிக்கும் போது திட உணவுகளைக் கொடுக்கலாம். 

வாயில் உணவுகளை வைக்கும் போது அதை துப்பாமல், வாயில் வைத்து சப்ப ஆரம்பித்தால், அதுவும் திட உணவுகளை கொடுக்கலாம் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. 

 குழந்தை பிறக்கும் போது இருந்த எடையுடன், தற்போதுள்ள எடையை சோதித்து பார்க்கும் போது, எடையானது இரண்டு மடங்கு அதிகமாக இருந்தால்,திட உணவுகளைக் கொடுக்கலாம் என்று அர்த்தம். 

மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை கொடுத்து வந்தால், அவர்களது வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, குழந்தையும் ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்.

உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆகவே குழந்தைக்கு உருளைக்கிழங்கை கொடுக்கும் போது,அதனை நன்கு மென்மையாக மசித்து, உங்கள் விரலால் ஊட்டி விட வேண்டும்.

பூசணிக்காயைக் கூட குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதிலும் இனிப்பு பூசணிக்காயை குழந்தைக்கு கொடுத்தால்,பற்கள் வளரும் போது ஏற்படும் வலியில் இருந்து சற்று நிவாரணம் கிடைக்கும்.

நன்கு கனிந்த வாழைப்பழத்தையும் கொடுக்கலாம். இதனால் அந்த வாழைப்பழத்தில் உள்ள இனிப்பு சுவையினால் குழந்தை விரும்பி சாப்பிட ஆரம்பிக்கும்.

ஆப்பிள் குழந்தைகளுக்கு முதன் முதலில் கொடுக்க வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் ஆப்பிள். இப்படி ஆப்பிளை குழந்தைக்கு கொடுத்தால், அவர்களது நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.

மீன் மீனை கூட குழந்தைக்கு கொடுக்கலாம். அதிலும் சால்மன் மீன் கொடுப்பது தான் மிகவும் சிறந்தது. குறிப்பாக பாதி துண்டு சால்மன் மீனில் ஒரு சிட்டிகை உப்பு தூவி, வாரத்திற்கு ஒரு முறை கொடுத்தால், மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைத்து, குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

கோதுமை பிரட் குழந்தை பசியாக இருக்கும் போது, அவர்களுக்கு ஒரு துண்டு கோதுமை பிரட்டை கொடுத்தால், குழந்தையின் குடலியக்கமானது சீராக செயல்படும்.

செரில் நிறைய குழந்தைகளுக்கு நல்ல ஃப்ளேவர்டு செரில்கள் தான் அதிகம் பிடிக்கும். எனவே உங்கள் குழந்தைக்கு நல்ல சுவைமிக்க ஃப்ளேவர்டு செரில்களை, பாலுடன் சேர்த்து காலை வேளையில் கொடுத்தால், குழந்தை அந்நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.

சிக்கன் சிக்கன் உடலின் வெப்பத்தை தூண்டிவிடும் உணவுப் பொருளாக இருந்தாலும், இதனை வாரம் ஒரு முறை அளவாக கொடுத்து வருவது நல்லது.

முட்டை குறிப்பாக நன்கு வேக வைத்த முட்டையை குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை கொடுத்தால், குழந்தை நன்கு வலுவுடன் வளரும்.

ஓட்ஸ் பற்கள் வளரும் நிலையில் உள்ள குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகளில் ஒன்று தான் ஓட்ஸ். இதனால் குழந்தையின் ஈறு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

அவகேடோ அவகேடோவை பாதியாக வெட்டி, அதில் உள்ள கூழ் போன்ற பகுதியை மசித்து, குழந்தைக்கு கொடுத்தால், குழந்தையின் செரிமானம் தடையின்றி நடைபெறும்.

9:58 PM Unknown

இட்லியில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் ஆரோக்கியமான ஒன்று தான் கொள்ளு இட்லி. இந்த கொள்ளு இட்லி செய்வது மிகவும் ஈஸி. மேலும் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதுமட்டுமல்லாமல், இது ஒரு அருமையான காலை உணவும் கூட. சரி, இப்போது அந்த கொள்ளு இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

கொள்ளு இட்லி
 
தேவையான பொருட்கள்: 
 
கொள்ளு - 1 கப் கைக்குத்தல் 
அரிசி - 3 கப் 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை: முதலில் கொள்ளு மற்றும் கைக்குத்தல் அரிசியை தனித்தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை கிரைண்டரில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை உப்பு சேர்த்து கலந்து, குறைந்தது 5-6 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும். பிறகு அதனை இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுத்தால், ஆரோக்கியமான கொள்ளு இட்லி ரெடி!!! இதனை கார சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சூப்பராக இருக்கும்.

9:06 PM Unknown

உடல் எடையை குறைக்க வேண்டுமென்று பலர் காலை வேளையில் ஓட்ஸை சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் பலருக்கு ஓட்ஸை பால் மற்றும் சர்க்கரை சேர்த்து தான் செய்யத் தெரியும். ஆனால் ஓட்ஸை காரமாகவும் செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், ஓட்ஸை மசாலா பொருட்கள் சேர்த்து மசாலா ஓட்ஸ் கஞ்சி செய்யலாம். இது அருமையான சுவையில் இருப்பதுடன், செய்வது மிகவும் ஈஸி. சரி, இப்போது அந்த மசாலா ஓட்ஸ் கஞ்சியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! மசாலா ஓட்ஸ் கஞ்சி ADVERTISEMENT தேவையான பொருட்கள்: ஓட்ஸ் - 1/2 கப் சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன் மல்லி தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸை போட்டு சிறிது நேரம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் வறுத்து வைத்துள்ள ஓட்ஸை போட்டு, தட்டு கொண்டு மூடி வைத்து ஓட்ஸை வேக வைக்க வேண்டும். ஓட்ஸானது நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சிறிது நேரம் கிளறி இறக்கி, இறுதியில் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மசாலா ஓட்ஸ் கஞ்சி ரெடி!

9:02 PM Unknown

Friday, January 17, 2014

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்? என்கிற தேடல் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தினம் ஒன்றாக சந்தைக்கு வரும் ஒவ்வொரு புது எண்ணெயுமே ‘ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்’ என விளம்பரப்படுத்திக் கொள்ள, மக்களின் குழப்பம் இன்னும் அதிகமானதுதான் மிச்சம்.இந்தக்  குழப்பத்துக்கு விடை காண்பதற்கு முன், எண்ணெய் நல்லதா, கெட்டதா, அது ஏன் அவசியம் என்கிற தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

எண்ணெய் என்பது கொழுப்பு... கொழுப்பு ஏன் தேவை?

உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க, செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலத்தைக் கொடுப்பதற்கு, உள் உறுப்புகளைப்

பாதுகாப்பதற்கு...

புரதத்திலும் மாவுச் சத்திலும் உள்ளதைப் போல 2 மடங்கு ஆற்றல், கொழுப்பில் இருந்து கிடைக்கிறது. ஒரு கிராம் புரதத்தில் கிடைப்பது 4 கலோரிகள்  என்றால் அதே அளவு கொழுப்பிலோ 9 கலோரிகள்!  கண்ணுக்குத் தெரிந்தது, கண்ணுக்குத் தெரியாதது என கொழுப்பில் 2 வகை. எண்ணெய், நெய்,  வெண்ணெய் என எல்லாம் கண்ணுக்குத் தெரிந்து நாம் எடுத்துக்கொள்கிற கொழுப்பு. அரிசி, பருப்பு, முட்டை, மீன், இறைச்சி, எண்ணெய் வித்துகள்  போன்ற உணவுகளின் மூலம் உடலுக்குள் சேர்வது கண்ணுக்குத் தெரியாத கொழுப்பு. இது தவிர, சாச்சுரேட்டட் மற்றும் அன்சாச்சுரேட்டட் என  கொழுப்பை இன்னும் 2 வகைகளாகப் பிரிக்கலாம். விலங்குக் கொழுப்பில் சாச்சுரேட்டட் வகை மிக அதிகம். இந்த வகைகொழுப்பு உடல்நலத்துக்கு  நல்லதல்ல. ஆனாலும், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான ஏ மற்றும் டி-யை நம் உடலுக்கு உறிஞ்சிக் கொடுக்கும் வேலையை இந்த வகைக் கொழுப்புகளே செய்கின்றன. அன்சாச்சுரேட்டட் அல்லது பாலி அன்சாச்சுரேட்டட் வகையை நல்ல கொழுப்பு என்கிறோம். ரத்தக்குழாய்களில் கொழுப்பு  படியாமல் செய்வது இதுவே. தாவரக் கொழுப்பு எல்லாமே அன்சாச்சுரேட்டட் வகையறாதான். வனஸ்பதி மட்டும் விதிவிலக்கு. அதனால், அதை  அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வனஸ்பதி மட்டுமல்ல... அறை வெப்ப
நிலையில் கெட்டியாகக் கூடிய எந்த வகை எண்ணெய் வகைகளும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை.

பெயர்               கொழுப்பின் அளவு (100 கிராமில்)    ஆற்றல்    மினரல்ஸ்
வெண்ணெய் நெய்    81 கிராம்    729 கிலோ கலோரிகள்    2.5 கிராம்
பாமாயில்                  100 கிராம்    900 கிலோ கலோரிகள்    800 ணுரீ அல்லது னீநீரீ பீட்டா கேரட்டின் (வைட்டமின் ஏ)
வனஸ்பதி
மற்றும்
இதர
சமையல்
எண்ணெய்கள்    100 கிராம்    900 கிலோ கலோரிகள்    இல்லை

எந்த எண்ணெயில் என்ன இருக்கிறது?

பாமாயில்

1 கிராம் பாமாயிலில், 800 µg அல்லது mcg  பீட்டா கேரட்டின் (வைட்டமின் ஏ) உள்ளது. ஆனாலும், அந்த எண்ணெயில் உள்ளது சாச்சுரேட்டட்  கொழுப்பு என்பதால் தொடர்ந்து உபயோகிக்க முடியாது.

சூரியகாந்தி எண்ணெய்

பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் என்பதால், இது உபயோகத்துக்கு ஏற்றது.

கடலை எண்ணெய்

பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு மிதமாக உள்ளது. ஆனாலும், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியச் செய்வதில் இதற்கும் பங்குண்டு. பாமாயில்  அளவுக்குக் கெடுதலானது அல்ல.

தவிட்டு எண்ணெய்
ரைஸ் பிரான் எண்ணெய் எனக் கேள்விப்படுகிறோமே... அதுதான் தவிட்டு எண்ணெய். இதய நோயாளிகளுக்கு மிக நல்லது.

நல்லெண்ணெய்

இதுவும் பாலி அன்சாச்சுரேட்டட் வகையைச் சேர்ந்தது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பாக மாற்றும் தன்மை  கொண்டது.

ஆலிவ் ஆயில்

இதய நோயாளிகளுக்கு ஏற்றது. இதை சூடுபடுத்தக் கூடாது. பொரிக்க, வறுக்கப் பயன்படுத்த முடியாது. சாலட்டுக்கு உபயோகிக்கலாம்.

தேங்காய் எண்ணெய்

சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமுள்ளதால், ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.

கடுகு எண்ணெய்

ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகமுள்ளது. ஆன்ட்டி பாக்டீரியல் தன்மையும் கொண்டது. இதயத்துக்கு நல்லது.  கடுமையான வாசம் காரணமாக, நம்மூர்  மக்களுக்கு இந்த எண்ணெய் பிடிப்பதில்லை. வட இந்திய மக்கள், கடுகு எண்ணெயை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய்?

ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் எண்ணெய் போதுமானது. அந்த அளவு அதிகமாகும்போது, ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவும்  அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான 1,800 கலோரி உணவில், 30 சதவிகிதம் கொழுப்பு இருக்கலாம். அந்த 30 சதவிகிதமும்  நல்ல கொழுப்பிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும். அதாவது உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பாக இருப்பது நல்லது. மற்றபடி எண்ணெய்,  வெண்ணெய், நெய் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் நேரடிக் கொழுப்பு 15 முதல் 20 சதவிகிதத்தை மிஞ்சாமலிருப்பதுதான் சரி.

உபயோகித்த  எண்ணெயா..? உஷார்!

பொரிக்கவோ, வறுக்கவோ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது. அப்படிப் பயன்படுத்துவதால்,  ‘டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட்’ அதிகமாகி, அது ரத்தக்குழாய்களில் கொழுப்பாகப் படியும். புற்றுநோய்க்குக்கூட காரணமாகலாம் என்கிறார்கள். அதனால்,  கொதிக்க வைத்த எண்ணெயை, அதற்கடுத்த 2 நாள்களுக்குள் தாளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தித் தீர்க்கலாம் அல்லது கொட்டி விடலாம்.  பொரிப்பதற்கு எப்போதும் குறைவான எண்ணெயே உபயோகிக்கவும். இந்த விஷயத்தில் மிச்சம் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு, ஆரோக்கியக்  கேட்டை விலைக்கு வாங்க வேண்டாம்!

எப்படி உபயோகிக்க வேண்டும்?

நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் - இந்த 3 எண்ணெய் களையும் சம அளவில் கலந்து உபயோகிக்கலாம் அல்லது 2  மாதங்களுக்கு ஒரு எண்ணெய் என மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஒரே எண்ணெயை வருடக்கணக்கில் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

கிழங்கு சமைப்பதென்றால், லிட்டர் லிட்டராக எண்ணெயைக் கொட்டி வறுத்தும் பொரித்தும்தான் செய்ய வேண்டும் என்றில்லை. உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என எல்லாவற்றையும் மசியலாகச் செய்து சாப்பிடலாம். நான்ஸ்டிக் கடாயில் செய்தால்  எண்ணெய் செலவு குறையும். லேசாக தண்ணீர் தெளித்துச் செய்தாலும் அதிக எண்ணெய் குடிக்காது.

எந்தக் காய்கறியை சமைத்தாலும், முதலில் ஆவியில் வேக வைத்து விட்டு, பிறகு தாளிப்பதற்கு
மட்டும் எண்ணெய் உபயோகிக்கலாம்.

தோசை ஊற்றும் போது அந்தக் காலத்தில் செய்தது போல கல்லை, துணியால் துடைத்து விட்டு செய்தால் எண்ணெய் செலவு குறையும்.தோசை  ஊற்றியதும், அதை மூடி வைத்து வேக விட்டாலும் எண்ணெய் அதிகம் தேவைப்படாது.

ஸ்பெஷல் சமையல்  

மிக்சட் ஃப்ரூட் சாட்

என்னென்ன தேவை?
மாதுளம் பழம் - 1, கொய்யா, ஆப்பிள், வெள்ளரி, கேரட், கமலா ஆரஞ்சு - தலா 1, தக்காளி - 2, எலுமிச்சைப் பழம் - அரை மூடி, தேன் - 1 டீஸ்பூன்,  ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன், சாட் மசாலா - அரை டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
மாதுளையை முத்துகளாக உதிர்த்துக் கொள்ளவும். ஆரஞ்சு சுளைகளில் விதை நீக்கித் தனியே வைக்கவும். மற்ற பழங்கள், காய்கறிகளை சிறிய  துண்டுகளாக வெட்டவும். எலுமிச்சைச்சாறு, ஆலிவ் ஆயில், தேன் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு ஸ்பூனால் நன்கு அடித்துத் தனியே  வைக்கவும். நறுக்கிய பழங்கள், காய்கறிகளை ஒன்றாகச் சேர்க்கவும். சாட் மசாலா தூவவும். எலுமிச்சை-தேன்-ஆலிவ் ஆயில் கலவையை அதில்  கலந்து, குளிர வைத்துப் பரிமாறவும்.
இதய நோய், நீரிழிவு உள்ளவர்களும் டயட் செய்வோரும் கூட சாப்பிடலாம்.
நீரிழிவுக்காரர்கள் மட்டும் பழங்களின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
மலச்சிக்கலுக்கும் மருந்து.

இஞ்சி லேகியம்

என்னென்ன தேவை?
பாதாம் பருப்பு - 10, வெல்லம் - 1 கப், இஞ்சி - 150 கிராம், நெய் - 1 டேபிள் ஸ்பூன், தனியா மற்றும் சீரகம் - தலா 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
பாதாம் பருப்பை ஊற வைத்துத் தோல் உரித்துக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும். தனியாவையும் சீரகத்தையும்  அப்படியே மிக்சியில் நைசாக பொடிக்கவும். பிறகு அதில் பாதாம், இஞ்சி சேர்த்து, கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மையாக அரைக்கவும். ஒரு  பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு, வெல்லம் சேர்த்துக் கரைந்ததும், வடிகட்டவும். வெல்லப்பாகில் அரைத்த விழுது சேர்த்து, அடுப்பில்  வைத்துக் கிளறவும். கலவை நன்கு கெட்டியாகி, திரண்டு வரும் போது, நெய் சேர்க்கவும். அல்வா பதம் வந்ததும் இறக்கவும். ஆறியதும், நெய் மேலே  படியும். நெய் வேண்டாம் என்பவர்கள், அதை நீக்கி விட்டு சாப்பிடலாம். குழந்தைகளுக்கு நெய்யுடன் சேர்த்துக் கொடுக்கலாம்.
செரிமானத்துக்கு மிக நல்லது இந்த லேகியம். குறிப்பாக பண்டிகை நாள்களின் போது அஜீரணம் தவிர்க்க உதவும்.  கண்ணுக்குத் தெரிந்த கொழுப்பான  நெய், கண்ணுக்குத் தெரியாத கொழுப்புள்ள பாதாம் என இரு கொழுப்புகளும் சேர்ந்தது இது.

- ஆர்.கௌசல்யா படங்கள்: மாதவன்
நன்றி குங்குமம் தோழி
10:23 AM Unknown