Sunday, March 30, 2014
'மைக்ரோவேவ் அடுப்பு’ (நுண்ணலை
அடுப்பு) மூலம் சமைத்தால் உணவில் இருக்கும் சத்துக்கள் போய்விடுமா?’ -
இந்தச் சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இன்னொருபுறம் மைக்ரோவேவ் அடுப்பில்
சமைத்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் இருக்கிறது. இதில்
எது உண்மை? எது புனைவு? சுகாதார மேம்பாட்டு அலுவலர் பூர்ணிமா, உணவியல்
நிபுணர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர்
கோ.ராஜா ஆகியோரிடம் பேசினோம்.
மைக்ரோவேவ் அடுப்பு எப்படிச் செயல்படுகிறது?
'மைக்ரோவேவ் அடுப்பில் உணவைச் சமைக்கும் போது, முதலில்
அடுப்பினுள் மின்சார அலை உண்டாகும். அந்த அதிர்வினால் நீர், கொழுப்பு,
சர்க்கரை ஆகியவற்றின் மூலக்கூறுகள் அதிர்வடைந்து ஒன்றுடன் ஒன்று உராய்ந்து
வெப்பம் உண்டாகும். கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்களை இந்த அலை
பாதிக்காது. மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்க அதற்குரிய பாத்திரங்களை மட்டுமே
பயன்படுத்த வேண்டும்’ என்று பூர்ணிமா கூறினார்.
'மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் சத்து இழப்பு ஏற்படுமா?’
இந்தக் கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் கோ.ராஜா,
''மைக்ரோவேவ் அடுப்புக்குள் இருக்கும் மேக்னெட்ரான் என்னும் கருவி
அடுப்புக்குள் வைத்த உணவுப் பொருளைச் சூடேற்ற உதவுகின்றது. இதில் சமைக்கும்
நேரமும் குறைவு, காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மறைந்து போகாது'' என்றார்.
இந்த சந்தேகம் குறித்து உணவியல் நிபுணர்
கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியபோது, ''காய்கறிகளையும் ஒயிட் மீட் என்று
சொல்லப்படும் மீன், கோழி ஆகியவற்றையும் மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பதால்
சத்துக்களில் பெரிய இழப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ரெட் மீட் எனப்படும்
ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் நிறைய எண்ணெய் விட்டு
மசாலாக்கள் சேர்த்துச் சமைத்தால் சாப்பிட ருசியாக இருக்குமே தவிர
ஆரோக்கியமானதாக இருக்காது.'' என்றார். மற்ற சமையலுக்கும் மைக்ரோவேவ்
சமையலுக்குமான வித்தியாசத்தையும் அவர் விளக்கினார்.
''மைக்ரோவேவ் அடுப்பில் பாலைச் சுடவைத்தால் அதிலுள்ள
லைசோஸைம் சிதையும். சாதாரண அடுப்புச் சமையலின்போது பாத்திரத்தில்
காய்கறிகளை அதிக நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் அது கருகியும் தீய்ந்தும்
போய்விடும். அவற்றையே குக்கரில் வேக வைக்கும்போது காய்கறிகளின் ருசி
குறைந்துவிடும் சாத்தியம் அதிகம். ஆனால் மைக்ரோவேவ் அடுப்பில் சரியான
சூட்டில் முறையாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளின் சத்துக்கள் அப்படியே
இருக்கும். காய்கறிகளின் நிறமும் மாறாது'' என்றார்.
மைக்ரோவேவ் அடுப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
மைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை:
6:46 PM
Unknown

Monday, March 24, 2014
தேவையான பொருட்கள்:
சேமியா - 1 கப் பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது) கேரட் - 1 (நறுக்கியது) பீன்ஸ் - 4 (நறுக்கியது) கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் பட்டை - 1 கிராம்பு - 5 பிரியாணி இலை - 2 கறிவேப்பிலை - 1 கொத்து கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு ADVERTISEMENT
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து நீரை கொதிக்க விடவும். அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து, கொதிக்கும் நீரில் அந்த சேமியாவைப் போட்டு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, இறக்கி மூடி தனியாக வைத்து கொள்ளவும். (முக்கியமாக சேமியா குலைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.) பின் நீரை வடித்து, ஒரு தட்டில் அந்த சேமியாவை பரப்பி, குளிர வைக்கவும். பின் மற்றொரு வாணலியில் நீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை போட்டு, வேக வைத்துக் கொள்ளவும். பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளிக்கவும். பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதோடு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, மசாலா அனைத்தும் ஒன்று சேரும் வரை நன்கு கிளறவும். மசாலா அனைத்து காய்கறிகளுடன் ஒன்று சேர்ந்ததும், அதில் சேமியாவைப் போட்டு கிளறி, தீயை குறைவில் வைத்து, தட்டால் வாணலியை மூடி 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும். இப்போது சுவையான சேமியா வெஜிடேபிள் கிச்சடி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, தயிருடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
9:16 PM

Tuesday, March 18, 2014
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 2
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாகற்காயின் தோலை சீவி, பின் அதனை கழுவி, துண்டுகளாக்கி, விதைகளை நீக்கி விட வேண்டும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து, ஐஸ் கட்டிகளைப் போட்டு குடிக்க வேண்டும்.
இப்போது நீரிழிவு நோயாளிகள் குடிப்பதற்கு ஏற்ற பாகற்காய் ஜூஸ் ரெடி!!!
7:45 AM

Subscribe to:
Comments (Atom)