Thursday, January 23, 2014

Posted by Unknown on 9:02 PM No comments
உடல் எடையை குறைக்க வேண்டுமென்று பலர் காலை வேளையில் ஓட்ஸை சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் பலருக்கு ஓட்ஸை பால் மற்றும் சர்க்கரை சேர்த்து தான் செய்யத் தெரியும். ஆனால் ஓட்ஸை காரமாகவும் செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், ஓட்ஸை மசாலா பொருட்கள் சேர்த்து மசாலா ஓட்ஸ் கஞ்சி செய்யலாம். இது அருமையான சுவையில் இருப்பதுடன், செய்வது மிகவும் ஈஸி. சரி, இப்போது அந்த மசாலா ஓட்ஸ் கஞ்சியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! மசாலா ஓட்ஸ் கஞ்சி ADVERTISEMENT தேவையான பொருட்கள்: ஓட்ஸ் - 1/2 கப் சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன் மல்லி தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸை போட்டு சிறிது நேரம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் வறுத்து வைத்துள்ள ஓட்ஸை போட்டு, தட்டு கொண்டு மூடி வைத்து ஓட்ஸை வேக வைக்க வேண்டும். ஓட்ஸானது நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சிறிது நேரம் கிளறி இறக்கி, இறுதியில் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மசாலா ஓட்ஸ் கஞ்சி ரெடி!

Categories:

0 comments:

Post a Comment