வேர்க்கடலை,
பொட்டுக்கடலை போன்றவற்றை உருண்டை பிடிக்க வெல்ல பாகு காய்ச்சும்போது,
வெல்லத்துடன் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் சர்க்கரையையும் சேர்த்துக்
காய்ச்சினால், உருண்டைகள் கரகரப்புடனும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமலும்
இருக்கும்.
- கே.சுபாக்கனி, மேலகிருஷ்ணன் புதூர்
கறிவேப்பிலை,
கொத்தமல்லி ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது சீக்கிரமே அழுகிவிடுகிறதா?
அவற்றை ஈரமில்லாமல், ஒரு செய்தித்தாளில் சுற்றி, கறுப்பு நிற பிளாஸ்டிக்
பையில் வைத்து சுருட்டி, ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். பத்து
நாட்களானாலும், அழுகாமல் அப்படியே பசுமையாக இருக்கும்.
- ஆர்.ராமாத்தாள், சென்னை-42
சப்பாத்தி
மிருதுவாக இருக்க கொஞ்சம் எண்ணெய் சேர்த்து மாவு பிசைவோம். அதற்குப்
பதில், முதலில் எண்ணெய் சேர்க்காமல் மாவு பிசையவும். பிறகு, ஒவ்வொரு
சப்பாத்தியையும் ஒரு சிறு அப்பளம் போல் உருட்டி, அதன் மேல் எண்ணெயைத் தடவி,
நான்காக மடித்து மீண்டும் சப்பாத்தியாகத் திரட்டி சுட்டால் மென்மையாக
இருக்கும். குழந்தைகளுக்கு எண்ணெய்க்குப் பதில் நெய் தடவலாம். எண்ணெய்
வேண்டாதவர்க்கு எதுவும் தடவாமல் அப்படியே சப்பாத்தி செய்து கொடுக்கலாம்.
- பா.மலர், திருப்பூர்
சமைக்கும்போது
கிழங்குகள் தவிர்த்து மற்ற காய்கறிகளைக் கூடுதலாக தண்ணீர் விட்டு
வேகவையுங்கள். பிறகு, அந்தத் தண்ணீரை வடிகட்டி எடுத்து சிறிது சோள மாவைக்
கரைத்து விட்டு, ஒரு கொதி வரும் வரை அடுப்பில் சுட வையுங்கள். இதில்
மிளகுப்பொடி, உப்பு சேர்த்து பெரியவர்களுக்கும், தேன் கலந்து
குழந்தைகளுக்கும் சூப்பாக கொடுக்கலாம். விரும்பினால் புதினா, கொத்தமல்லித்
தழையையும் சேர்க்கலாம்.
- எஸ்.சாய் சாத்விகா, சீர்காழி
காலையில்
செய்த இட்லிகள் மீதமிருக்கிறதா? இட்லிகளின் இருபுறமும் வெண்ணெய் அல்லது
நெய் தடவி, சூடான தோசைக்கல்லில் போட்டு குறைந்த தீயில், பிரவுன் நிறம்
வரும் வரை சுட்டு எடுத்தால்... மொறுமொறுவென்று ஆகிவிடும். இதைத் தக்காளி
சாஸுடன் குழந்தைகளுக்குக் கொடுத்தால்... சட்டென்று காலியாகிவிடும்.
இட்லிகள் தடிமனாக இருந்தால், நடுவில் வெட்டி இரண்டு மெல்லிய வட்டங்களாக
சுடலாம்.
- ஜே.கமலம், நெல்லை
Categories: டிப்ஸ்
Best Pokies Casinos in Australia | Mapyro
ReplyDeleteThe world's most 수원 출장샵 popular slot machine. The 포천 출장샵 object of most casinos is to keep the free coins you 아산 출장안마 deposit and 강릉 출장마사지 play the games you're interested 부천 출장마사지 in. For free