என்னென்ன தேவை?
எண்ணெய்-1 டீஸ்பூன்
வெட்டப்பட்ட வெங்காயம்-1
கிராம்பு-1,
வெட்டப்பட்டது பூண்டு-1
சுண்டல் 1கப்
காய்கறிகள் -1கப்
எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை
புதினா
தயிர்-1கப்
உப்பு தேவையான அளவு
எப்படி செய்வது?
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, கிராம்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் தண்ணீர் ஊற்றி சுண்டல், காய்கறிகளை சேர்த்து ஒரு கொதி வரும் வரை மூடி வைக்கவும்.. 15 நிமிடங்கள் கழித்து கொதிவந்ததும் எலுமிச்சை சாறு, தயிர், ஆகியவற்றை சேர்த்து கிளறவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கி புதினா, கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
Categories: சூப்
0 comments:
Post a Comment