தேவையானவை
சாதம் - 2 கப்
வெங்காயம் - 1 (நீள வாக்கில் நறுக்கியது)
தக்காளி - 1(பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 10 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தளை - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
புதினா - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
உப்பு
அரைக்க
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
தக்காளி - 2
பட்டை - 2 துண்டு
கிராம்பு -1
சோம்பு - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 1
செய்முறை
- சாதத்தை உதிரியாக செய்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கி , அரைத்தவற்றையும், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
- மல்லித்தளை, புதினா சேர்த்து கலக்கவும்.
- இதில் தேவையான அளவு எடுத்து சாதத்தில் கலந்தால் தக்காளி சாதம் ரெடி.
Categories: சாத வகைகள்
0 comments:
Post a Comment