- புழுங்கலரிசி -- 1 கப்
- வெந்தயம் -- 1/4 கப்
- கருப்பட்டி -- 1/2 கப்
- சுக்குப்பொடி -- ஒரு ஸ்பூன்
- ஏலப்பொடி -- 1/2 ஸ்பூன்
- நல்லெண்ணெய் -- 5 ஸ்பூன்
- உப்பு -- ஒரு சிட்டிகை
- புழுங்கலரிசி (5 மணி நேரம்), வெந்தயம் (முதல் நாள் இரவே) இரண்டையும் தனித்தனியாக ஊறவைக்கவும்.
- இரண்டையும் ஒன்றாக நெருநெருவென ஆட்டவும்.இதனுடன் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
- கருபட்டியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி கொதிக்கவிடவும்.இதை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
- இந்த கருப்பட்டி பாலுடன் ஆட்டிய மாவை போட்டு ,ஏலப்பொடி,சுக்குப்பொடி,நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கெட்டி படாமல் கிளறியபடியே இருக்கவேண்டும்.
- தண்ணீர் தொட்டு பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும். அது தான் பதம்.
Note:
வெந்தயம் குளிர்ச்சியான பொருள். இதை சாப்பிட்டால் வயிற்று வலி (பீரியட்ஸ் டைம் வலி) சரியாகி விடும்.
Categories: களி
0 comments:
Post a Comment